Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கான வட்டி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கிசான் விகாஸ் பத்ரா மீதான வட்டி விகிதம் 6.9-ல் இருந்து 7 ((10 அடிப்படை புள்ளிகள் உயர்வு)) ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அத்திட்டத்தின் முதிர்வு காலத்திலும் (Maturity Period) ஒரு மாதம் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக 124 மாதங்கள் இருந்த நிலையில், இப்போது 123 மாதங்களாக குறைந்து இருக்கிறது. தபால் அலுவலகத்தின் 2 வருடகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தில் 5.5ல் இருந்து 5.7ஆக 20 அடிப்படை புள்ளிகளையும், 3 ஆண்டுகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம் 5.5இல் இருந்து 5.8 ஆக 30 அடிப்படை புள்ளிகளையும் உயர்த்தப்பட்டு உள்ளது. மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை 7.4ல் இருந்து 7.6 ஆகவும் (20 அடிப்படை புள்ளிகள் உயர்வு), மாதாந்திர வருமான கணக்கு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை 6.6 -6.7 (10 அடிப்படை புள்ளிகள் உயர்வு) ஆகவும் உயர்த்தி சென்ற மாதம் 29ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டுஇருக்கிறது.

பொது வருங்கால வைப்புநிதி (PPF), சேமிப்பு வைப்புநிதி திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய பிற திட்டங்களின் வட்டிவிகித்தில் எந்த மாற்றமுமில்லை. முன்னதாக நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது. சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் அரசாங்கப் பத்திரங்களின் சந்தை மதிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிறுசேமிப்புத் திட்டங்கள்

இது பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டு விருப்பங்களை எளிதாக்குவதற்கும், அதே சமயத்தில் வளர்ச்சிக்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் உருவாக்கப்பட்டவை ஆகும். சிறுசேமிப்பு திட்டங்களில் சேமிப்பு வைப்புநிதி, தபால் அலுவலக வைப்புநிதி, பொது வருங்கால வைப்புநிதி, மூத்தகுடிமக்கள் சேமிப்புதிட்டம், மாத வருமான கணக்கு திட்டம், ஐந்தாண்டு தொடர் வைப்புதிட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்ரா மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்றவை அடங்கும்.

Categories

Tech |