புதுச்சேரி மாநிலத்தில் சாலை விபத்தில் 445 பேர் இறந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் சிக்கி பலியாகினர். பைக்கில் செல்லும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வது அவசியம். இதனால் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது என்பது 80 சதவீதம் தடுக்கப்பட்டு உயிர் பலி ஏற்படாமல் இருக்கும். 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரை ஹெல்மெட் அணியாமல் போனதன் காரணமாக 181 பேர் பலியாகியுள்ளனர்.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர், ஹெல்மெட் இல்லாமல் பயணிப்போருக்கு முதல் முறை ஆயிரம் மட்டுமன்றி 3 மாத ஓட்டுனர் உரிம ரத்து செய்யப்படும் விதமாக புதுச்சேரியில் அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. மேலும் சமீப காலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஒட்டி செல்வது அதிகரித்து வருகிறது. இவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதி கிடையாது. எனவே வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதி. மேலும் வாகன பதிவு சான்றிதழ் ஒரு வருடம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.