தெருவில் செல்லும் சிறுவர்களை பிடித்து வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக சிறுவர் சிறுமிகள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேபோன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கூறி இளைஞர்கள் ஒன்றுகூடி மது அருந்துவது தகராறு செய்வது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றது . இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விவேகானந்தர் தெருவின் ஓரமாக இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த தெரு வழியாக செல்லும் சிறுவர்களைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவர்களது வாயில் மதுபானத்தை இளைஞர்கள் ஊற்றி உள்ளனர். இது காணொளியாக சமூகவலைதளத்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த காணொளியை ஆதாரமாக வைத்து இதில் தொடர்புடைய இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.