நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 13 முதல் 15-18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ளநிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடம் ஒதுக்க வேண்டும். பள்ளிகளில் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைந்து ஆசிரியர் ஒருவரை தலைமை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 2007& அதற்கு முன் பிறந்த மாணவர்களின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் சிறார்களுக்கான தடுப்பூசியை தகுதியானவர்கள் போடுவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயது வரை உள்ள எனது நண்பர்களை கோவிட் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் பாதுகாப்பை குறைக்காமல் கொரோனாவுக்கு ஏற்ற நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.