Categories
உலக செய்திகள்

“சிறுவயது விராட் கோலி உடன் ஒன்றாக இருக்கும் ரிஷி சுனக்”…? மீம்ஸில் செமயாய் கலாய்த்த இணையவாசிகள்…!!!!!

இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரிஷி சுனக்குக்கு பிரதமர் மோடி முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் போன்ற உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரிஷி சுனகிற்கு ட்விட்டர் வழியே வாழ்த்து தெரிவித்த சிலர் அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.

அதாவது நெஹ்ரா ஏறக்குறைய தோற்றத்தில் ரிஷி சுனக்கை ஒத்திருக்கின்ற நிலையில் வாழ்த்து செய்தியில் தவறுதலாக நெஹ்ராவின் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதற்கு வலு சேர்க்கும் விதமாக ட்விட்டரில் மீம்ஸ்களும் உலா வருகிறது சிறு வயது விராட் கோலி உடன் ஒன்றாக இருக்கும் ரிஷி சுனக் என ஹேஷ்டேக்குடன் புகைப்படம் ஒன்றை கவுரங் பர்த்வா என்பவர் பகிர்ந்திருக்கிறார்.

Categories

Tech |