அமெரிக்காவில் முன்னாள் அழகி பட்டம் வென்ற பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணமான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அழகியாக இருந்ததால் இவர் கைது செய்யப்பட்டது அப்போது, ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.. அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் பள்ளியில் படிக்கும் 15 வயதுடைய மாணவன் ஒருவனுக்கு தன்னுடைய நிர்வாண போட்டோக்களை அனுப்பியுள்ளார்.
மாணவனின் மொபைல் போனை பெற்றோர் எதிர்பாரதவிதமாக எடுத்து பார்த்த போது, அதில் அவரின் 4 மேலாடை இல்லாத போட்டோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த போட்டோக்களை அவர் சமூகவலைதளமான ஸ்நாப் சாட் (Snap Chat) மூலம் அந்த மாணவனுக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து பெற்றோர் அவரிடம் விசாரித்ததில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட பின் அவர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி அழகி ராம்சே கூறுகையில், என்னுடைய செயல்களுக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன், நான் மிகவும் வருந்துகிறேன். நான் இதற்கு முன்னதாக இதுபோன்று எதையும் செய்தது கிடையாது. நான் இனி ஒருபோதும், மீண்டும் இதேபோன்று செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்..
இந்த வழக்கினால் மிகுந்த மனச்சோர்வடைந்துள்ள நான், விடா முயற்சியுடன் பணிபுரிந்து வந்த எனது வேலையையும் இழந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன..