திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஒரு சிறுமி அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த நவரசன் என்பவர் சிறுமியை தனியாக வீட்டுக்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறினார். உடனே இந்த சம்பவம் குறித்து மகளிர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் போக்சோவில் நவரசனை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவரசனுக்கு 70 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.