சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகாவைச் சேர்ந்த ரவி (40) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ரவி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை விளை நிலத்திற்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து வருவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது பற்றி சிறுமியிடம் கேட்டுள்ளனர் இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் சிம்சோலி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்துள்ளனர் இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ கோட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எமனப்பா தீர்ப்பு கூறியுள்ளார் அந்த தீர்ப்பில் சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக ரவிக்கு 20 வருடம் சிறை தண்டனையும் 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.