2007ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் கற்பழிக்கப் பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேகாலயா மாநிலத்தில் தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருபவர் ஜூலியஸ் டார்பாங். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது . புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடைபெற்றுவந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் நீதிபதி எப்.எஸ்.சங்மா, குற்றவாளி ஜூலியஸ் டார்பாங் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் இவர் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்ட பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜூலியஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.