17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமியை அப்பகுதியை சேர்ந்த நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவி தங்களது பெற்றோர்களிடம் தெரிவிக்க அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து செய்த போலீசார் சிறுமியை வேறு சிலரும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் 19 முதல் 33 வயது உடையவர்கள் என்பதும், ஒரு நபர் மட்டும் சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு சிறுவன் மட்டும் அப்பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .