கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பல்லவராயநத்தம் காலனியில் வசிக்கும் கூலி தொழிலாளியான நாகராஜ்(24) என்பவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து அதனை காண்பித்து சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து நாகராஜ் பல மாதங்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.