சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தை சேர்ந்தவர் சுடலை மாரியப்பன். இவர் ஆகஸ்ட் 30ஆம் தேதி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறையினுள்ளே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மாரியப்பன் தனது லுங்கியை கிழித்து தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறைச்சாலையில் கைதி தற்கொலை செய்து கொண்டது குறித்து கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.