Categories
தேசிய செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்…… பஞ்சாயத்தாரின் தீர்ப்பால் நேர்ந்த கொடூரம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலம், பரேலியில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுவனின் கிராமத்திற்கு சென்ற சிறுமியின் குடும்பத்தார் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சிறுவனுக்கு 18 வயது ஆனதும் அந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறுவன் மீது எந்த புகாரும் அளிக்க வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் உறவினர்களின் பேச்சுக்கு சிறுமியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சிறுவனை கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |