மதுரையில் 16 வயது சிறுமியை 200 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினம்தோறும் பெண்கள் குழந்தைகள் என பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் மதுரையில் 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 200க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை இழந்து விட்டு, தாய்க்கு மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னிடம் அடைக்கலம் புகுந்த சிறுமியை, அவரது உறவினர் ஜெயலக்ஷ்மி என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். அந்த சிறுமியை 5 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி அடைந்த போலீசார் அந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டனர். இதனையடுத்து அவர்களை பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.