திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரடாபட்டு கிராமத்தில் லாரி ஓட்டுநர் பூபாலன் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்காக பூபாலன் வெளியே சென்றிருந்த சூழ்நிலையில், 6 வயது மகள் ரித்திகாவை தாய் சுகன்யா கரும்பால் அடித்துள்ளார்.
இதை பார்த்துப் பதறிய அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதாவது பூபாலன் வேலைக்காக வெளியே சென்றுவரும் நேரத்தில் தாய் சுகன்யா செல்போனில் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக 6 வயது சிறுமி அவரது தந்தையிடம் கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த தாய் சென்ற 2 மாதத்திற்கு முன்பு இருந்தே கடுமையாகத் தாக்கி வந்துள்ளார். இந்த நிலையில் கரும்பால் தாக்கப்பட்ட சிறுமி இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தாய் சுகன்யாவை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.