சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியில் சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் கோபியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் சஞ்சய் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த ஈரோடு சைல்ட் லைன் ஆலோசகர் தீபக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சஞ்சயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.