சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். ஓட்டுனரான பிரகாஷ் ஆண்டிமடம் பகுதிக்கு பால் சப்ளை செய்ய அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பிரகாசுக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரகாஷ் சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.