சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 7 பக்க கடிதம் சிக்கியது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆவகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற திவ்யதர்ஷினி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் திவ்யதர்ஷினியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் உள்ள குலமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் திவ்யதர்ஷினி தூக்கில் சடலமாக தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திவ்யதர்சினி எழுதிய 7 பக்க கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனது பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. இதில் நான் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கூறினார்கள். அப்போது நன்றாக படிக்க வேண்டும் என எனது பெற்றோர் அறிவுரை கூறினர். ஆனாலும் நான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் படிப்பு வராத காரணத்தினால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்யப் போகிறேன் என சிறுமி உருக்கமாக எழுதியுள்ளார்.