சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள புதூரை சேர்ந்த பயாஸ்கான் என்பவர் 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நெருங்கி பழகி, சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அனைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்திருக்கின்றார். பின் சிறுமியிடம் வீட்டிலிருந்து நகையை எடுத்து வாருமாறு கூறியதையடுத்து சிறுமியும் வீட்டில் இருந்த 10 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.
இதையடுத்து வீட்டில் நகை இல்லாததை பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி தான் ஒருவரிடம் நகையை கொடுத்ததாக கூறியதையடுத்து பயாஸ்கானை பிடித்து விசாரணை செய்ததில் சிறுமி இடமிருந்து வாங்கிய 10 பவுன் நகையை தனது நண்பர்கள் சதீஷ், சரவணகுமார் ஆலோசனைப்படி சரவணகுமாரின் தாய் முத்துலட்சுமி மூலமாக அடகு கடையில் அடமானம் வைத்து ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம் வாங்கி பயாஸ்கானுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் சதீஷ்க்கு 20,000 சரவணக்குமாருக்கு 30,000 முத்துலட்சுமிக்கு 50000 என பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து நகையே ஏமாற்றியதற்கு போலீசார் பயாஸ்கான், சதீஷ், சரவணகுமார், முத்துலட்சுமி உள்ளிட்டடோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். பின் 4 லட்சம் மதிப்புள்ள பத்து பவுன் நகையை அடகுகடையிலிருந்து மீட்டனர். விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்ததற்கு தனிப்படை போலீசருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.