சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை இயந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபாகரனுக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பிரபாகரன் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குழந்தை திருமணம் செய்தல் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.