சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை முருகேசன் என்பவரும், 16 வயது சிறுவனும் இணைந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு மது கொடுத்து இருவரும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் முருகேசன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.