Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. கல்லூரி மாணவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராதாபுரத்தில் அருண்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |