Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் 4-வது தெருவில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி சேகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். இதனை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையில் இருக்கும் சேகருக்கு சிறை அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |