14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்க்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்குமேடு கிராமத்தில் ஏசு ராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பேச்சு ராஜன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேச்சு ராஜனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.