Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் குழந்தைவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் குழந்தைவேலுவை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு குழந்தை வேலுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். இதனை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையில் இருக்கும் குழந்தைவேலுக்கு அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |