Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. அ.தி.மு.க பிரமுகர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அ.தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள விளாங்காடுபாக்கம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வகித்து வருகிறார். இவர் விளாங்காடுபாக்கம் கிளை அ.தி.மு.க நிர்வாகியாக இருக்கிறார். இந்நிலையில் பாஸ்கர் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.

இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மாதவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |