Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு என்று குறிப்பிட்ட சில சலுகைகள் உள்ளன. அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் இவற்றை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.அதனால் அரசு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய திட்டங்களை வெகுவாக விளம்பரங்கள் மூலமாகவும் அறிக்கையின் மூலமாகவும் தெரியப்படுத்தி வருகிறது. இதற்கு முன்னதாக உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வந்தது.

அரசு வழங்கும் இந்த உதவி தொகை பெறுவதற்கு 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு கலை மற்றும் அறிவியல் அல்லது வணிகம் சார்ந்த துறைகளில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் தற்போதைய அமைச்சரவையின் ஆலோசனைப்படி இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட தொகையை விட தற்போது இரண்டு மடங்கு அதாவது ஐம்பதாயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |