சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்த இதனை மட்டும் செய்து வந்தால் போதும் விரைவில் குணமடையும்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் சில நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக சிறுநீர் தொற்று பாதிப்பு தற்போது அதிக அளவு உள்ளது.
அதனை குணப்படுத்த இதனை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். சுரைக்காய் கால் கிலோ எடுத்து மேற்பரப்பு தோலை முழுவதுமாக நீக்கி கொள்ளவும். அதன் பிறகு பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிதளவு புதினா சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் 200 மில்லி அளவு இளநீர் சேர்த்து வடிகட்டி குடிக்கவும். சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். இது ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும் ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுத்திணறலை சரி செய்யும். இந்த அருமருந்து பல்வேறு நோய்களுக்கு சிறந்ததாக அமையும்.