பெண் ஒருவருக்கு சிறுநீர்ப்பையில் இருந்த 8 சென்டிமீட்டர் கண்ணாடி டம்ளரை டாக்டர்கள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாட்டில் துனிசியாவை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருக்கு தனது சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக எண்ணி டாக்டரை அணுகி உள்ளார். அவரின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுநீர்ப்பை கல்லால் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணின் உடலை ஸ்கேன் செய்தபோது 8 சென்டிமீட்டர் அளவிலுள்ள கண்ணாடி டம்ளர் உள்ளே இருப்பது தெரியவந்தது. இந்த பெண் 4 ஆண்டுகளுக்கு முன்பு குடிக்கும் கண்ணாடி தம்ளரை பாலியல் இன்பத்திற்காக பயன்படுத்தியது தெரிய வந்தது.
மேலும் இந்தப் பெண் பிறப்புறுப்பு வழியாக பாலியல் தூண்டுதல் நடைமுறையை கைவிட்டு, சிறுநீர்க்குழாயின் பாதையை பயன்படுத்தியுள்ளார் என்று தெரியவந்தது. இதனை அடுத்து ஹபீப் போர்குய்பா பல்கலைக்கழக மருத்துவமனையின் அதிக அனுபவமுள்ள டாக்டர்களால் நவீன சிகிச்சை மூலம் இந்தப் பெண்ணின் சிறுநீர்பையில் உள்ள கண்ணாடி டம்ளரை அகற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.