Categories
தேசிய செய்திகள்

சிறுத்தைப் புலிகளின் உயிருக்கு இதுவால் ஆபத்து…. கவலை தெரிவித்த வன பாதுகாவலர்கள்…..!!!!

இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைப் புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பிரதமர் மோடி மத்தியபிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விட்டார். எனினும் இத்திட்டம் வெற்றிகரமாக அமையுமா என விலங்கு பாதுகாவலர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். புது சுற்றுப்புறச் சூழலில் சிறுத்தைப் புலிகள் வேட்டையாடி உட்கொள்ள உணவு, பிற வனவிலங்குகளுக்கு இரையாகாமால் தங்களை அவை காத்துக்கொள்ளும் திறன் மற்றும் இனப்பெருக்க முறை போன்றவற்றில் பெரும் பிரச்சினைகளும், சவால்களும் நிறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்தியாவின் முன்னணி விலங்கு பாதுகாவலர் வால்மிக்தாபர் அளித்த பேட்டியில் “வனவிலங்குகளான ஹைனாக்கள்(கழுதைப்புலி), சிறுத்தைகள், காட்டு நாய்கள் ஆகியவைகளால் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள ஆப்பிரிக்க சீட்ட இனமான சிறுத்தைப் புலிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. புது சுற்றுப்புறச் சூழலில் சிறுத்தைப் புலிகள் என்ன சாப்பிடும் என்பது தெரியவில்லை. மத்தியப்பிரதேசத்திலுள்ள குனோ தேசிய பூங்காவில் இடப் பற்றாக்குறை மற்றும் இரையை தேடுவதில் சிரமம் போன்றவற்றை சிறுத்தைப் புலி எதிர்கொள்கிறது.

இப்பகுதி பெரும்பாலும் சிறுத்தைப் புலியின் முக்கிய எதிரிகளான கழுதைப் புலிகள் மற்றும் இந்திய சிறுத்தைகளால் நிறைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் கழுதைப் புலிகள் சிறுத்தைப் புலிகளைத் துரத்திக் கொல்லும் திறன்பெற்றவை. இந்த பகுதியை சுற்றிலும் 150 கிராமங்கள் இருக்கிறது. அங்கு உள்ள நாய்கள் சிறுத்தைப் புலிகளை கொல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சிறுத்தைப் புலிகள் அமைதியான விலங்குகள் ஆகும். அவை பெரும்பாலும் இந்த வன விலங்குகளை எதிர்த்து சண்டையிடாதவை. இதன் காரணமாக அவை பிற விலங்குகளுக்கு இரையாகிவிடுகிறது.

உலகின் வேகமாக பாய்ந்துசெல்லும் திறன் வாய்ந்த, வேகமாக ஓடக்கூடிய விலங்கினமாக சிறுத்தைகள் மற்றும் சிறுத்தைப் புலிகள் இருந்தாலும், புது  சுற்றுப்புறச்சூழலில் அது சாத்தியமில்லை. செரெங்கேட்டி (தான்சானியாவின் தேசிய பூங்கா) ஆகிய இடங்களில் பெரிய புல்வெளிகள் உள்ளதால் சிறுத்தைகள் ஓடிவிடும். இருந்தாலும் குனோ தேசிய பூங்காவில் பெரும்பாலான வனப் பகுதியை புல்வெளியாக மாற்றாவிட்டால், வேகமாகஓட சிறுத்தைகளால் முடியாது. அதுமட்டுமின்றி அவ்வப்போது அங்குவரும் புலிகள் கூட இந்த சிறுத்தைப் புலிகளுக்கு எமனாக அமையலாம். இங்கு சிறுத்தைப் புலிகள் புள்ளி மான்களை தான் பெரும்பாலும் வேட்டையாட வேண்டும்.

ஆனால் அவை வனப் பகுதிக்குள் மறைந்துகொள்ள முடியும் சூழல் அதிகம். அத்துடன் இந்த மான்களுக்கு பெரிய கொம்புகள் உள்ளதால் சிறுத்தையை காயப்படுத்தலாம். இந்த இன சிறுத்தைகளால் காயம் தாங்கமுடியாது. இதில் சிறுத்தைப் புலிகள் நீண்டகாலமாக அரச பரம்பரையினரின் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த விலங்கு ஆகும். அவை இதுவரையிலும் எந்தவொரு மனிதனையும் கொன்றதில்லை. சிறுத்தைப் புலிகள் அமைதியான விலங்குகள். சிறுத்தைப் புலிகள் இனப்பெருக்கத்தில் சிறப்பாக செயல்படாதவை.

உலகில் சுமார் 6,500 -7,100 சிறுத்தைப்புலிகள் மட்டுமே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவற்றின் இறப்புவிகிதம் (குட்டி நிலையில் இறப்பு) 95 சதவீதம் ஆகும். இது அதிகமான விகிதம் ஆகும். சிறுத்தைப் புலிகள் மீண்டுமாக இந்தியாவில் வளர்க்கப்படுவது ஒரு பெரிய பணியாகும். இந்த விலங்குகளின் வாழ்க்கையை உறுதிப்படுத்த அவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |