Categories
தேசிய செய்திகள்

சிறுத்தைப்புலி திட்டம் எங்களுடையது….. ஆதாரத்தை வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி…..!!!!

இந்தியாவில் அழிந்து போன சிறுத்தை புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் விதத்தில் நமீபியாவில் இருந்து8 சிறுத்தைப்புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் நேற்று விடுவித்தார். இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு முந்தைய அரசாங்கங்கள் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று அவர் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் 2009இல் ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தை காங்கிரஸ் அறிமுகப்படுத்திய ஆதார கடிதத்தை ஜெயராம் ரமேஷ் என்று பகிர்ந்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை பகிர்ந்த அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் தெரிவித்துள்ளதாவது ” 2009இல் ப்ராஜெக்ட் சீட்டாவை அறிமுகப்படுத்திய கடிதம் இது. நமது பிரதமர் ஒரு பொய் கூறுகிறார். பாரத் ஜோடோ யாத்ரா மீதான எனது ஈடுபாட்டின் காரணமாக நேற்று இந்த கடிதத்தை பகிர முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |