Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சிறிய கோவில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள 10 கோடி ஒதுக்கீடு”…. அமைச்சர் பேச்சு….!!!!!

குமரி மாவட்டத்திலுள்ள 100 வருடங்கள் பழமை வாய்ந்த சிறிய கோவில்களில் திருப்பணிகள் செய்ய ரூபாய் பத்து கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக அமைச்சர் சேகர் பாவு கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சென்ற புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்பொழுது அவர் கூறியுள்ளதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திருப்பணிகள் நிறைவடைந்து பல வருடம் இன்னும் நடைபெறாத கோவில்களை உடனடியாக பட்டியலிட்டு அந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடித்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கின்றார்.

இதனால் தமிழகத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குமரி மாவட்டத்தில் 100 வருடங்களுக்கு மேலாக இருக்கும் சிறிய கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டு கோவில்களின் புகைப்படங்களை கொண்டு சிறிய ஆல்பம் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. அந்த ஒவ்வொரு சிறிய கோள்களுக்கும் திருப்பணி செய்வதற்காக தலா ரூபாய் 10 லட்சம் வீதம் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம் எனக் கூறியுள்ளார். மேலும் குமரியில் இருக்கும் 12 சிவாலயங்களில் ஒன்றான திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் திருப்பணி செய்ய ரூபாய் 84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |