Categories
தேசிய செய்திகள்

சிறிய உதவியை கூட மோடி அரசு செய்ய தயாராக இல்லை…. ராகுல்காந்தி ஆவேசம்…..!!!!

மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி, கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க முடியாது என்று தெரிவித்து இருந்தது. கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்து இருப்பதை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி  தனது டிவிட்டர் பக்கத்தில், வாழ்க்கையை மதிப்பீடுவது சாத்தியமில்லை. அரசாங்கத்தின் இழப்பீடு ஒரு சிறிய உதவி மட்டுமே. ஆனால் அதை செய்ய மோடி அரசு தயாராக இல்லை. முதலில் கோவிட்-19 தொற்றுநோயின் போது சிகிச்சையின் பற்றாக்குறை மற்றும் பின்னர் தவறான புள்ளிவிவரங்கள் மற்றும் அதற்கு மேல் அரசாங்கத்தின் கொடுமை என பதிவு செய்து இருந்தார்.

Categories

Tech |