கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவின் மூலம் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.
அதனால் அவர் பெரியார்!
சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! pic.twitter.com/27NDoinshn
— M.K.Stalin (@mkstalin) July 17, 2020