Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட பொதுமக்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள் ….!!

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கோட்டை  கிராமத்தில் மன்னார்குடி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு  சிறப்பு மருத்துவ  முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவர் ஜெயபாலன், கால்நடை ஆய்வாளர் செங்குட்டுவன், மணிகண்டன், உதவியாளர் மோகன், குமுதவல்லி, பாரதிமோகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து  ஆத்திக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள  பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 700  கால்நடைகளுக்கு கோமாவாரி தடுப்பூசி, ஆடுகளுக்கு பி. பி. ஆர். தடுப்பூசி, குடல்புழு நீக்கம், சினைப்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் சிறப்பாக கால்நடைகளை வளர்த்து அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |