சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருந்துகள் வழங்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி அவர்கள், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் 3 நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுதந்திர தின விழா நாடும் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருப்பதால் ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுதும் காவல்துறையில் சிறப்பாக புலனாய்வு செய்து திறம்பட செயல்பட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் விருது வழங்கிய கௌரவிப்பது போல் இந்த வருடமும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுகள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 5 காவலர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அதன்படி புதுவை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன், இன்ஸ்பெக்டர்கள் அமுதா, பாண்டி முத்துலட்சுமி, சசிகலா மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் சிறப்பாக பணியாற்றிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 காவலர்களுக்கும் உயர் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.