Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி விழா…. கோவில்களில் சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

புகழ்பெற்ற பிள்ளையார் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

 

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் அருகே சிறப்பு வாய்ந்த பயம் தீர்த்த பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையாருக்கு பால், தேன், திரவியம், மஞ்சள், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து லெட்சுமாங்குடி கலிதீர்த்த பிள்ளையார் கோவில், உச்சுவாடி நர்த்தன பிள்ளையார் கோவில், புனவாசல் மழுப்பெருத்த பிள்ளையார் கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பல பிள்ளையார் கோவில்களிலும் சங்கடகர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மேலும் நீடாமங்கலம் பகுதியில் உள்ள ஆலங்குடியில் புகழ்பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் இருக்கும் கலங்காமற்காத்த பிள்ளையார் சன்னிதி, காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கும் பிள்ளையார், மாரியம்மன் கோவிலில் இருக்கும் சதுர்வேத பிள்ளையார், சந்தானராமர் கோவிலில் இருக்கும் தும்பிக்கையாழ்வார் பிள்ளையார் மற்றும் காமராஜர் காலனியில் இருக்கும் பிள்ளையார் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளனர்.
இதனையடுத்து திருமக்கோட்டை பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற ஞானசித்தி பிள்ளையார் மற்றும் ராஜ பிள்ளையார்  திருக்கோவில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை காட்டப்பட்டு கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டு சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

Categories

Tech |