Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழா…. தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

சிறப்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு குருமன்ஸ் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டுதோறும் வீரபத்திரன் சுவாமிக்கு ஆடிப்பெருக்கு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த விழா ஆடி மாதம் தொடங்கி ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன் பிறகு மக்கள் வீரபத்திர சுவாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு சுவாமிக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையை தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோதமான முறையில் வழிபாடு நடத்தினர். மேலும் சவுக்கடி வாங்கியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்த திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |