கடற்கரையில் வைத்து பெரிய மீன் ஒன்றை கழுகு தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக்கு கெல்லி என்பவர் கடந்த வாரம் சென்ற போது கழுகு பெரிய மீன் ஒன்றை தூக்கிக்கொண்டு போவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவை வனத்துறை அதிகாரியான சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பலரும் வெகுநேரமாக சிறகுகளை அசைக்காமல் பறக்கும் கழுகு ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளனர். சுஷாந்த் நந்தா இதனை பதிவு செய்த சிறிது நேரத்திலேயே பல லட்சம் இணையவாசிகள் அந்த விடியோவை பார்த்து ஆச்சரிய பட்டுள்ளனர்.
Be like an Eagle. Pick up what you want from even a vast ocean & soar high up in life💕
Just in case you haven’t seen a bird flying around with a shark that it just plucked out of the ocean…..( Source: Rex) pic.twitter.com/racsetz8WX
— Susanta Nanda (@susantananda3) July 3, 2020