நடிகை சிருஷ்டி டாங்கே ‘த பெட்’ பிரஸ் மீட்டில் ஜான் விஜய் கலாய்த்து டார்ச்சர் செய்ததாக கூறியுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது ‘த பெட்’ என்ற சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து ஜான் விஜய், சிருஷ்டி டாங்கே, தேவிப்ரியா, பாண்டி, விஜே பப்பு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ‘த பெட்’ திரைப்படம் ஊட்டியில் படமாக்கப்பட்டது. இப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இதைத்தொடர்ந்து திரைப்படக் குழுவினர் ஒரு பிரஸ் மீட்டை நடத்தியுள்ளனர். அதில் பேசிய நடிகை சிருஷ்டி டாங்கே படத்தில் நடித்த அனைவரை பற்றியும் பேசியுள்ளார். மேலும் அவர் தன்னுடன் நடித்த ஜான் விஜய் பற்றிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ஜான் விஜய் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். தற்போது த பெட் திரைப்படத்தில் நடித்துள்ள சிருஷ்டி டாங்கே ஜான்விஜயை பார்த்து மிகவும் பயப்படுவாராம். ஜான் விஜய் படப்பிடிப்பில் அனைவரையும் கலாய்த்து கொண்டே இருப்பாராம். அதேபோல் சிருஷ்டி டாங்கேவையும் கிண்டல் என்ற பெயரில் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் பதிலுக்கு சிருஷ்டி டாங்கேவும் ஜான் விஜய்யை கலாய்த்து தள்ளிவிடுவாராம். இதனால் அவர் இருக்கும் பக்கமே ஜான் விஜய் போக மாட்டாராம். இவ்வாறு நடிகை சிருஷ்டி டாங்கே பிரஸ் மீட்டில் ஜான் விஜய் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் த பெட் திரைப்படம் நன்றாக வந்துள்ளதாக கூறி இப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.