Categories
உலக செய்திகள்

சிரியா முகாமில் தீ விபத்து…. குழந்தையுடன் 3 பேர் உயிரிழப்பு…. தொடரும் சோகம்….!!

அகதிகள் முகாமிலிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதுமட்டுமன்றி ஐஏஎஸ் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் கூட்டங்களின் ஆதிக்கமும் இங்கு அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் போர் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை சிரியாவில் உள்ள வடக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.இந்நிலையில்  சிரியாவில் உள்ள அல் ஹவுஸ் என்ற முகாமில் உள்ள ஒரு குடிலில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்தது.

இதனால் பரவிய தீயானது சற்று நேரத்தில் அடுத்தடுத்து குடில்களுக்கு பரவத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவதற்குள் எரிகின்ற தீயில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும்  18 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .

Categories

Tech |