Categories
சினிமா தமிழ் சினிமா

சிரித்தே செத்துவிட்டேன்…… கிண்டல் மீம்ஸ்களுக்கு….. பிரபல நடிகை அசத்தல் பதில்….!!

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா தன் முக பாவனையை வைத்து வைரலாகி வந்த மீம்ஸ்களை பார்த்து சிரித்தே செத்துவிட்டதாக ஜாலியாக தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். அந்த படம் கடந்த மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மாளவிகாவின் முக பாவனைகளை வைத்து கடந்த சில நாட்களாக மீம்ஸ்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த மீம்ஸ்களில் தனக்கு பிடித்த மீம்ஸ்களை மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த படங்களை பதிவிடும்போது சிரிப்பால் கண்ணீரே வந்து விட்டதாகவும், டூத் பிரஸ் மீமை பார்த்து சிரித்தே செத்து விட்டதாகவும் ஜாலியாக தெரிவித்துள்ளார். இவரைப்போல அனைவருமே தங்களைப் பற்றி மக்கள் கூறும் கருத்துக்களை பொது விமர்சனமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றால், கருத்து சுதந்திரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.

Categories

Tech |