Categories
சினிமா

சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பாலோ பண்ணுங்க… புகழ்ந்து தள்ளிய தமிழிசை….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவள் இவர் அரசியலிலும் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்றது. இதில் மாநில ஆளுநர் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பயனர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்  தெலுங்கு படம் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொண்டார். அதன் பிறகு பேசிய தமிழிசை சௌந்தரராஜன், சிரஞ்சீவி அறக்கட்டளை சார்பில் இதுவரை 9,30,000 யூனிட் ரத்தம் மற்றும் 4,580 ஜோடி கண்தானம் செய்ததற்காக  ஆளுநர் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு உதவிகள் செய்து வரும் சிரஞ்சீவியை பின்பற்றி மற்ற முன்னணி நடிகர்களும் ஏழை எளிய கலைஞர்களுக்கும் மக்களுக்கும் உதவ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |