காட்ஃபாதர் படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். தற்போது இந்த படம் தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது . மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் .
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவிக்கு வில்லனாக மாதவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.