Categories
சினிமா தமிழ் சினிமா

சியான் 61 படத்தின் புது அப்டேட்… விக்ரமுடன் இணையும் பிரபல நடிகர்… யார் தெரியுமா…?

மணிரத்தினம் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கம் படத்தில் விக்ரம் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே இ ஞானவேல் ராஜா, நீலம் ப்ரொடக்ஷன் உடன் இணைந்து தயாரிக்கின்றார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது.

மேலும் இதன் டெஸ்ட் சூட் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சீயான் 61 படத்தின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் நடிகர் பசுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் சியான் 61 படத்திற்கு கோல்ட் என டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Categories

Tech |