விக்ரமின் உடல்நிலை குறித்து அவரின் மகன் துருவ் விக்ரம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். இவர் தனது திரைப்படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வார். இந்த நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விக்ரம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றார்கள். மேலும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என ரசிகர்கள் நம்பிக்கை உடன் இருக்கின்றனர். மேலும் விக்ரம் எப்படி இருக்கின்றார் என்பது பற்றி அவரின் மகன் அப்டேட் கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் விக்ரமின் உடல்நிலை குறித்து அவரின் மகன் துருவ் விக்ரம் இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, அன்பான ரசிகர்களே, நல விரும்பிகளே அப்பாவுக்கு நெஞ்சு பகுதியில் லேசாக அசவுகரியம் ஏற்பட்டது. அதனால் தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. வதந்திகளை கேட்டு வேதனை அடைந்துள்ளோம். தற்பொழுது எங்கள் குடும்பத்திற்கு பிரைவசி அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சீயான் நலமாக இருக்கின்றார். நாளை அவர் வீடு திரும்புவார். இந்த அறிக்கை தெளிவு அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம் என கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் தற்பொழுது நிம்மதி அடைந்துள்ளனர்.