Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..போட்டிகள் விலகி செல்லும்..பொறாமைகள் மறையும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கொடுக்கல், வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இன்று இருக்கும். இன்று  மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் இருக்கட்டும். புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். இன்று மனம் நிம்மதி கொள்ளும் நாளாகவே இருக்கும்.

ஆன்மீக பணியில் நாட்டம் செல்லும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். உடல் நிலையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். இன்று  காதலர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். காதல் கைகூட கூடிய சூழலும் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றம் இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை உணவு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள். இரவில் தூங்குவதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |