சிம்புவும் திரிஷாவும் திருமணம் செய்து கொண்டதாக பரவிய வதந்திக்கு சிம்புவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
நடிகை திரிஷாவும் பாகுபலி படத்தில் நடித்த நடிகர் ராணாவும் காதலித்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்து பிரேக்கப் செய்துகொண்டனர்.மேலும் நடிகை திரிஷாவுக்கு பிரபல தொழிலதிபரான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் திருமணம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.
நடிகை திரிஷா கொரோனா ஊரடங்கு காலத்தில் சிம்புவுடன கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்புவும் த்ரிஷாவும் காதலித்து வருகின்றனர், ரகசிய திருமணம் செய்து கொண்டனர் போன்ற பல வதந்திகள் காட்டுத்தீயாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றது.
இதுகுறித்து நடிகர் சிம்புவின் குடும்பத்தினர் விடுத்த அறிக்கையில் எங்கள் மகன் சிம்புவின் திருமணம் குறித்து பல பொய்யான வதந்திகள் இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது போலவே லண்டனில் உள்ள கோடீஸ்வர பெண்ணுடன் சிம்புவிற்கு திருமணம் என்ற போலியான செய்தியும் வெளிவந்தது இப்படி வெளிவரும் அனைத்து செய்தியும் போலியானா வதந்திகள் என்று விளக்கம் அளித்துள்ளனர்.