‘மாநாடு’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக வலைத்தளங்களில் வெளியான செய்தி குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. முதல் போஸ்டரில் இஸ்லாமிய இளைஞன் போல் தோற்றமளிக்கும் சிம்பு தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரார்த்தனை செய்வது போல் அமைந்திருந்தது . இரண்டாவது போஸ்டரில் சிம்புவின் கையில் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற போஸ் இருந்தது .
இந்த இரண்டு போஸ்டர்களிலும் இருந்த சிம்புவின் தோற்றத்தை வைத்து இந்த திரைப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிட்டனர். இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த ‘மாநாடு’ திரைப்பட தயாரிப்பாளர், சிம்பு ஒரே வேடத்தில் தான் நடித்து வருகிறார் .அவர் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படும் செய்தி உண்மையில்லை என்று கூறியுள்ளார். மேலும் வெங்கட்பிரபுவுக்கு மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.