Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்பு அத மட்டும் செஞ்சா போதும்” கூல் சுரேஷை விட 10 மடங்கு குரல் கொடுப்பேன்…. நடிகை விஜயலட்சுமி உருக்கம்….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்  பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். கடந்த மூன்று வருடங்களாக சிம்புவின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையிலும் ரசிகர்களின் ஆதரவு இருந்ததால் மீண்டும் மாநாடு படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்திற்குப் பிறகு சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க, ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் மாநாடு படத்தில் இருந்தே சிம்புவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனால் பல்வேறு விதமான விமர்சனங்களை சந்தித்தாலும் கூல் சுரேஷ் சிம்புவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை நிறுத்தவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் கூல் சுரேஷ் அழுது கொண்டே ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ தொடர்பாக பிரபல நடிகை விஜயலட்சுமி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, நடிகர் கூல் சுரேஷ் சிம்புவுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அதை ஊடகங்களும் ஹைலைட்டாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் சிம்பு திறமை வாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய அக்காவின் மகள் நடிகர் சிம்புவின் வீட்டின் அருகே இருக்கும் ஜெயப்பிரதாவின் வீட்டில் இருக்கிறார். என்னுடைய அக்காவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் குழந்தையை சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் என்னுடைய அக்கா மகள் ஜெயப்பிரதாவின் வீட்டில் இருக்கிறார். எனவே தன்னுடைய வீட்டின் அருகாமையில் இருக்கும் என்னுடைய அக்கா மகளுக்கு நடிகர் சிம்பு உதவி செய்தால் நன்றாக இருக்கும். மேலும் நடிகர் சிம்பு உதவி செய்தால் கூல் சுரேஷை விட பத்து மடங்கு அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |